ராஜா நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதையா
ஏறெடுப்பேன் நன்றி பலி
என் ஜீவ நாளெல்லாம் நான்
நன்றி ராஜா இயேசு ராஜா (4)
1.
அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி
புது கிருபையை தந்தீரையா
ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
தினம் நன்றி சொல்ல வைத்தீரையா (2) – ராஜா
2.
வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
உம் வெளிச்சம் தந்தீரையா
பாதம் அமர்ந்து நான் உம் குரல்
கேட்கும் பாக்கியம் தந்தீரையா – ராஜா
3.
ஒவ்வொரு நாளும் உணவு உடையும் தந்து
பாதுகாத்து வந்தீரையா
உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
வழி நடத்தி வந்தீரையா- ராஜா
4.
துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
தூக்கிச் சென்றீரையா
அன்பர் உம் கரத்தால் அணைத்து அணைத்து தினம்]
ஆறுதல் தந்தீரையா (அதிசயம் செய்தீரையா) – ராஜா
5.
உமக்காக வாழ உம்நாமம் சொல்ல
தெரிந்தெடுத்தீரையா
உம்மோடு வைத்து ஊழியனாக
உருவாக்கி வந்தீரையா- ராஜா